கொரோனா 2-வது அலை எதிரொலி – சசிகுமார் படம் தள்ளிவைப்பு

0

கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், சசிகுமார் நடித்த திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா 2-வது அலை எதிரொலி - சசிகுமார் படம் தள்ளிவைப்புகொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

படக்குழுவினரின் அறிக்கை

இந்நிலையில், சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.