நியமிக்கப்பட்டது தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக் குழு

0

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழுத் தேர்தல் இடம்பெறும் வரை, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கெட் முகாமைத்துவ குழுவொன்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழுத் தேர்தல், எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு தற்காலிக நிறைவேற்றுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த தற்காலிக நிறைவேற்றுக்குழு தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழுத் தேர்தல் இடம்பெற்று நிர்வாகக்குழு நியமிக்கப்படும் வரை தேவையான கடமைகளையும், நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல், மே மாதம் 20ஆம் திகதி வரை குறித்த நிர்வாகக்குழு குழு தனது கடமைகளை நிறைவேற்றும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் தலைவராக பேராசிரியர் அர்ஜுன டி சில்வாவும் செயலாளராக அஷ்லி டி சில்வாவும், பொருளாளராக சுஜிவ முதலிகேவும், உறுப்பினராக சட்டத்தரணி உசித்த விக்மரசிங்கவும், அவதானிப்பாளராக அமல் எதிரிசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.