பிரெஞ்சு தூதரின் வெளியேற்றத்திற்காக வாக்கெடுப்புக்கு செல்லும் பாகிஸ்தான்

0

இஸ்லாமியவாதிகளின் வன்முறை மற்றும் பிரான்ஸ் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு தூதரை வெளியேற்ற பாகிஸ்தான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் வாக்களிக்கும் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகமது நபிகள் நாயகத்தை சித்திரிக்கும் கார்ட்டூன்கள் தொடர்பில் ஒருவாரத்திற்கு மேலாக பாகிஸ்தான் முழுவதும் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-லாபாய்க் குழு (Tehreek-e-Labaik Pakista‍n) முக்கிய நான்கு கோரிக்கைகளுள் பிரெஞ்சு தூதரை வெளியேற்றுவதும் அடங்கியுள்ளது.

பிரெஞ் தூதரின் வெளியேற்றம் தொடர்பில் திங்களன்று பாகிஸ்தான் அரசாங்கம் இந்த குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

“டி.எல்.பி உடனான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரெஞ்சு தூதரை வெளியேற்றுவதற்காக நாங்கள் இன்று பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்வைப்போம்” என்று அமைச்சர் ஷேக் ரஷீத் அகமட் ஒரு காணொளிப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் இம்ரான் கான் திங்களன்று தாமதமாக தொலைக்காட்சி உரையில், தனது நாட்டை எச்சரித்தார், பிரெஞ்சு தூதரை வெளியேற்றினால் பாகிஸ்தான் விலை கொடுக்கும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடும். ஏனெனில் நாட்டின் ஏற்றுமதியில் 50 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விநியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

பேச்சு சுதந்திரம் குறித்த ஒரு வகுப்பில் நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் கார்ட்டூன்களைக் காட்டியதற்காக செச்சென் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு ஆசிரியருக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஆண்டு பிற்பகுதியில் அஞ்சலி செலுத்தியதை அடுத்து பாரிஸுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமாகிவிட்டன.

பிரெஞ்சு தூதரை வெளியேற்றுவது ஒரு தீவிரமான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-லாபாய்க் குழுவின் முக்கிய நான்கு கோரிக்கைகளில் ஒன்றாகும்.

கடந்த வாரம் அதன் உறுப்பினர்கள் பிரதான நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் முக்கிய நகரங்களுக்கான அணுகல் வழிகளைத் தடுத்தது, பொலிஸாரை தாக்கியதுடன் பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இஸ்லாமியவாதிகளுடனான மோதல்களின் போது நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர். 

அதேநேரம் ஒரு டஜன் பேர் பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று டி.எல்.பி உறுப்பினர்களும் உயிரிழந்ததாகவும் இஸ்லாமியவாதிகள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.