புத்தாண்டில் யாழில் கோர விபத்து : இரு சகோதரர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றையவர் படுகாயம்

0

சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவரும் துவிச்சகர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

மூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றுள்ளார். பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். 

சாரதியை வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.