மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?

0

இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?மாரி செல்வராஜ், சூர்யாஇயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதன்படி தனுஷை வைத்து இவர் இயக்கி உள்ள கர்ணன் படம், அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துருவ், மாரி செல்வராஜ்

இதையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பா.இரஞ்சித் தயாரிக்க உள்ள இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாம்.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அவ்வாறு வெளியானால் தான் இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.