24 நாள் உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நவல்னி

0

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முக்கிய எதிர்ப்பாளரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி மருத்துவ சிகிச்சை பெற்றபின் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் நவல்னி, தனது தனிப்பட்ட மருத்துவரிடம் மருத்துவ உதவி கோரி மார்ச் 31 அன்று தொடங்கிய உண்ணா விரதத்தை  முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறியுள்ளார்.

“நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நல்ல மனிதர்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி, நாங்கள் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்” என்று நவல்னி தனது உண்ணாவிரதத்தின் 24 ஆவது நாளான இன்றைய தினம் இன்ஸ்டாகிராமில் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உண்ணாவிரதத்தை தொடர்வது நவல்னியின் உயிருக்கு ஆபத்தானது என்று அவரது மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டும் உள்ளார்.

இந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வரும் 44 வயதான அரசியல்வாதியான நவல்னி, மார்ச் 31 ஆம் திகதி உண்ணாவிரதத்தை தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.