இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.68 இலட்சம் பேருக்கு கொரோனா

0

இந்தியாவில் நேற்று முன்தினம் 4.01 இலட்சம், நேற்று 3.92 இலட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 732 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 99 இலட்சத்து 25 ஆயிரத்து 604-ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக உள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 13 ஆயிரத்து 642 ஆகும். 

இந்தியா முழுவதும் இதுவரை 15 கோடியே 71 இலட்சத்து  98 ஆயிரத்து 207 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

Leave A Reply

Your email address will not be published.