சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திசர பெரேரா ஓய்வு

0

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரோரா அறிவித்துள்ளார்.

இந்த முடிவினை 32 வயதான திசர பெரேரா தமக்கு அறிவித்ததாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

வரவிருக்கும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிக்களுக்கு எதிரான ஒருநாள் சுற்றுப் பயணங்களின்போது பல சிரேஷ்ட இலங்கை வீரர்களை கைவிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.

இந் நிலையிலேயே திசர பெரேராவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கேரியர்

டெஸ்ட்: 

  • போட்டி – 06
  • ஓட்டங்கள் – 203
  • விக்கெட் – 11

ஒருநாள்: 

  • போட்டி – 166
  • ஓட்டங்கள் – 2338
  • விக்கெட் – 175

இருபதுக்கு – 20: 

  • போட்டி – 51
  • ஓட்டங்கள் – 1204
  • விக்கெட் – 175

Leave A Reply

Your email address will not be published.