சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் : முன்னிலையில் சீ ஹோக்ஸ்

0

பணப்பரிசு பொழியும் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் கடந்த வார நிறைவில் சீ ஹோக்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளம் ஏற்பாடு செய்துள்ள 10 அணிகள் பங்கேற்றும் தொழில்சார் சுப்பர்  லீக் கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ள சீ ஹோக்ஸ் அணியும் கடைசி இடமான 10 ஆம் இடத்திலுள்ள நியூ யங்ஸ் அணியும் மோதவுள்ளன. 

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இப்போட்டித் தொடரில் சகல அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதுவரையான முடிவுகளின்படி சீ ஹோக்ஸ் அணி 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

அப் கன்ட்றி லயன்ஸ் மற்றும் ரெட் ஸ்டார் அணிகள் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலை அடங்கலாக 4 புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாம் , மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. 

நான்காம் இடத்தில் புளு ஸ்டார் கழகமும், ஐந்தாம் இடத்தில் கொழும்பு எப்.சி.யும்  காணப்படுகின்றது. ரட்ணம் கழகம், டிபெண்டர்ஸ் கழகம், புளு ஈகள்ஸ், ரினோன், நியு யங்ஸ் ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.