சூர்யா படத்திற்கு இசை அமைத்திருக்கும் க்ரிஷ்

0

சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் பெயரிடப்படாத படத்திற்கு பாடகரும், நடிகருமான கிரிஷ் இசை அமைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் அரிசில் கே மூர்த்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் பிக்பொஸ் பிரபலமும், நடிகையுமான ரம்யா பாண்டியன், ‘ஓ மை கடவுளே’ பட புகழ் நடிகை வாணி போஜன் ஆகிய இருவரும் கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். 

இப்படத்திற்கு நடிகை சங்கீதாவின் கணவரும், நடிகரும், பின்னணி பாடகருமான கிரிஷ் இசை அமைத்து வருகிறார். படத்தைப் பற்றிய அப்டேட்டை இசை அமைப்பாளர் க்ரிஷ் வெளியிட்டிருக்கிறார். 

அதன்படி படத்தின் பாடல்கள் நிறைவடைந்து விட்டதாகவும், படத்தின் பின்னணி இசை தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்தின் இசை வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடலை நடிகர் சூரியாவின் சகோதரியும், பின்னணி பாடகியுமான பிருந்தா சிவக்குமார் பாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.