முள்ளியவளை பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் – அச்சத்தில் மக்கள்

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மூன்றாம் கண்டம் பகுதியில் உள்ள இலிங்கேஸ்வரன் என்பவருடைய வயல்  காணியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வயல் காணிக்குள் கைக்குண்டு இருப்பதை அவதானித்த காணி உரிமையாளரால் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பொலிஸார் கைக்குண்டை சென்று பார்வையிட்டுள்ளதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று செயலிழக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரின் காணியில் இருந்த குண்டை பார்வையிட சென்றவேளை  இன்னுமொரு குண்டும் இருப்பது பொலிஸாரால் நேற்று இனம் காணப்பட்டுள்ளது.

மக்கள் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது வெடிபொருட்கள் அகற்றியதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகளில்  தொடர்ச்சியாக இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அண்மையில் தண்ணிமுறிப்பு பகுதியில் 10 ஆர்பிஜி குண்டுகள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.