சூப்பரான ஆட்டுக் குடல் சூப்

0

ஆட்டுக் குடலில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆட்டுக் குடலில் அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டுக் குடல் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
சீரகம், மிளகுத்தூள் – தலா 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய், தண்ணீர் – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை

குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் போட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி.


Leave A Reply

Your email address will not be published.