வடக்கு ஆளுநரின் பிரஜா காவல்துறை இனவழிப்புக்கான புதிய ஆயுதமா?

0

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரஜா காவல்துறை என்ற அமைப்பை உருவாக்கி, அதில் வேலைவாய்ப்பற்ற தமிழ் இளைஞர்களை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளமை இனவழிப்புக்காக புதிய ஆயுதம் ஒன்றை சிங்களம் தயாரிக்கிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

வடக்கு ஆளுநரின் மேற்பார்வையில் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் கீழ் அந்த அமைப்பு செயற்படும் என்றும் இதன் வாயிலாக வாள்வெட்டுக்குழுவிற்கு முடிவு கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட நகர்வுகள் குறித்து புலப்படுத்துகின்றது.

உலகின் பலம்பொருந்திய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகளின் துணைகொண்டு ஒடுக்கிய ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வாள்வெட்டுக்குழுக்களை ஏன் ஒடுக்க முடியவில்லை. ஏனெனில் அதனை உருவாக்கி வடக்கில் வன்முறையை ஏற்படுத்தி இராணுவத்தை நிலை நிறுத்துவதே ஸ்ரீலங்கா அரசின் நோக்கம் என்பது சிறு குழந்தையும் அறியும்.

இந்தத் திட்டமிட்ட நாடகத்தின் மற்றொரு அங்கமாக பிரஜா காவல்துறையை உருவாக்கி அதில் சிங்களவர்களை பெரும்பான்மையாக நுழைத்து தமிழ் மக்களிடையே வீண் வன்முறை குழப்பங்களை தோற்றுவிப்பதுடன் வடக்கு கிழக்கில் தமிழர் கோரும் காவல்துறை அதிகாரத்தை மறுப்பதும் இதன் பின்னணியில் உள்ள திட்டமாகும்.

Leave A Reply

Your email address will not be published.