சூப்பரான ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

0


மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய சமோசா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 3 கப்
அவல் – 3 கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழை- 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைத மாவை போட்டு அதனுடன் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

சிறிதளவு மைதாவை தண்ணீர் சேர்த்து பசை போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மிளகாய் தூள், சீரக பொடி, பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.

பிசைந்து வைத்த மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி அதை முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த வெங்காய கலவையை நிரப்பி ஓரங்களில் மைதா பசையை தடவி மூடிவிடவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்காளை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சுவையான வெங்காய சமோசா ரெடி.

Leave A Reply

Your email address will not be published.