பிரதோஷ விரதமும்… அபிஷேக பொருட்களின் பலன்களும்…

0

ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷமானது வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் இரண்டு முறை வருவது உண்டு. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷம் காலமாக கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஈசனுடைய மந்திரங்களை உச்சரிப்பது, கோவிலுக்கு சென்று ஈசன் வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதில் திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானது. பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை வழிபடுவது யோகத்தை கொடுக்கும். பிரதோஷ வேளையில் சிவ மந்திரம் மட்டுமல்லாமல், நந்தி பகவானையும் வணங்குவது அனைத்து துன்பங்களையும் போக்கவல்லதாக அமையும்.

அனைத்து சிவன் கோவில்களிலும் அன்றைய தினத்தில் விசேஷமான பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். பிள்ளை இல்லாதவர்கள் இந்த விரதம் இருந்து வழிபட்டால் பிள்ளை வரம் நிச்சயம் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.

சிவனுக்கு வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருட்களில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. நோய்கள் அகல அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். சுற்றியிருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும், எதிர்ப்புகளை மறைய செய்யவும் சர்க்கரை வாங்கி கொடுக்கலாம். உடல் பலம் பெற தேன் வாங்கி கொடுக்கலாம். செல்வம் மென்மேலும் பெருக பஞ்சாமிர்தம் வாங்கி கொடுக்கலாம். நல்ல வாழ்வு அமைய எண்ணெய் தானம் செய்யலாம். இளநீர் வாங்கி கொடுக்க பிள்ளை வரம் கிடைக்கும். மகசூல் பெருக பழங்களும், சக்திகள் பெருக சந்தனமும், வளங்கள் சேர தயிரும், முக்தி கிடைக்க நெய்யும் வாங்கிக் கொடுக்கலாம். அனைத்து பலன்களும் பெற இன்று சிவ வழிபாடு செய்ய மறக்காதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.