வெளியானது தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலின் முகப்பு

0

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவலின் முகப்புப் படம் இன்று வெளியிட்டப்பட்டுள்ளது. குறித்த நாவலை வெளியிடும் தமிழ்நாடு ஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் வேடியப்பன் இன்று வெளியிட்டார். 

ஈழத்தில் பரவலாக அறியப்பட்ட தீபச்செல்வன், நடுகல் நாவல் வாயிலாக பெரும் கவனத்தை ஏற்படுத்தியவர். இந்த நாவல் சிங்களத்தில் வெளியாகியுள்ளதுடன் ஆங்கிலத்திலும் விரைவில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில் தீபச்செல்வனின் புதிய நாவலான பயங்கரவாதி இந்த மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இதன் அட்டைப்படத்திற்கான ஓவியத்தை பூண்டி ஜெயராஜ் வரைந்துள்ளார். அட்டைப்படத்தை லார்க் பாஸ்கரன் வடிவமைத்துள்ளார். 

நாவலின் முகப்பு படம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.