வலிகளை தாண்டிய புன்னகை | கேசுதன்

0

ஓடும்நீரோடை ஒட்டிடாத தடைகளை
தட்டியே தாவிடும்
நெகிழ்ந்திடாத புற்களை உரசிய
நீரோடை சாரல்கள்
தெவிடாத புன்சிரிப்பும்
சிலிர்த்து நிற்கும்
மாறாத முகமது சிந்திடாத குணமது
ஓடியே சேரும் ஒருவழி போக்காய்
அலசிய அம்புயங்களும் அரவணைக்கும்
தீண்டாத பேரன்புக்காய் ஓடைகளை
உடைத்தெறியவா முடியும்
 முட்டால் மேகம் பொலிந்தே தள்ளும்
கண்ணீரை
கொண்டுதானே செல்ல வேண்டும்
படாதபாடும் படும் வழிமறிக்கும்
தடைகளில் பட்டால்
பட்டால் தானே புரியும் வலி வேறு வழி வேறு என்று
ஆனாலும்
 நின்றிடா துணிவும் வழியில்லா தேடலும்
ஒற்றை ராட்ஜ்ஜிய குடையில்
பகுத்தறிய தானே வேண்டும்
அவன்பால் சென்றால் என்ன
வலிகளை தாண்டிய புன்னகை  

கே.சுதன்

Leave A Reply

Your email address will not be published.