தீபச்செல்வனின் பேஸ்புக் முடக்கம் | கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை | கேசுதன்

0

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட ஒன்றே. அதிலும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படாமை என்பது இனவாத ஒடுக்குமுறையாகவே கருதப்பட வேண்டும். தமிழின மக்கள் படும் கஷ்டத்தினை எழுத்துருவில் உருவாக்குவதும் சமூக ஊடகங்களிலும் தெரியப்படுத்துவதும் தமிழ்  எழுத்தாளர்களின் பணிகளாகும். 

இதில் எமது ஈழத்து கவிஞர் தீபச்செல்வன் அவர்களின் முகநூல் பக்கம் ஸ்ரீலங்கா அரசு ஆதரவுத் தரப்பால் முடக்கப்பட்டுள்ளது. ஈழமக்களின் விடுதலை போராட்டம் எழுத்துவடிவில் தத்ரூபமாக உலக அரங்கிற்கு எடுத்து காட்டிய ஓர் உன்னத எழுத்தாளர் தீபச்செல்வன். விசாரணை என்றபெயரில் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார். எம்முடன் வலிகளையும் உணர்வுகளையும் உணர்ந்த உன்னத படைப்பாளி எதற்கும் அஞ்சாது தனது எழுத்துக்கள் மூலம் உலக அரங்கிற்கு எடுத்துக்காட்டிய வண்ணம் உள்ளார்.

தேச பற்றும் இனப்பற்றும் உள்ள எமது எழுத்தாளரினால் தமிழ் மக்களின் துன்பதுயரங்ககளை உலகுக்கு எடுத்துக்காட்டிய உன்னத எழுத்தாளர். நாவல்கள் மூலமும் கவிதைகள் மூலமும் இன வன்முறைகளையும் இன ஒடுக்குமுறைகளையும் எழுத்துருவில் வடிவமைத்த உன்னத படைப்பாளி. எதற்கும் துணிந்து நம் மக்களை இன ஒடுக்குமுறைகளில் காப்பாற்ற இருந்து காப்பாற்ற எழுத்துக்களுக்கு உயிரையும் உணர்வுகளையும் உருவெற்றிய மாபெரும் படைப்பாளி என்றே கூற முடியும்.

வன்கொடுமை அரசு நினைத்தது என்னவெனில் எழுத்தாணி போராளி தீபச்செல்வனின் முகப்புத்தகத்தை முடக்கினால் அரசுக்கு எதிராக மக்கள் செய்யும் புரட்சியையும் கவிஞரின் எழுத்துக்களையும் முடக்கலாம் என முடிவு செய்துவிட்டது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும் தமிழர்களுக்கு இருக்கும் கருத்து சுத்தந்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது என்று. முகப்புத்தகம் என்பது எழுத்துருவாக்க போராளிகளின் சிறு துரும்பு அதை முடக்குவதால் முடங்கிபோவதற்கு துணிந்தவரல்லர்.

களம் காணா கயவர்களுக்கு புரியுமா களம் கண்டு போராடிய உன்னத மாவீரர்களின் தியாகங்கள். அனைத்தையும் உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிய உன்னத எழுத்தாளர் பட்டியலில் முதன்மையானவர் தீபச்செல்வன். எழுத்துக்களுக்கு உயிர் உள்ளது என்பது உண்மையே அரசு அலறும் விதத்தில் ஒவ்வொரு எழுத்துக்களுக்கு உயிரேற்றி உணர்வளித்துள்ளார் தீபச்செல்வன். அதனால் தான் முகப்புத்தகம் எனும் சிறுதுரும்பை முடக்கியுள்ளனர். எளிய நடைமுறையில் உணர்வேற்றும் இவரின் கவிதைகள் மக்களின் பார்வைக்கு செல்வதற்காக முகப்புத்தகத்தை சிறு களமாக கொண்டு தனது பதிவுகளை பகிர்ந்தார்.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக தீபச்செல்வன் அவர்களின் முகபுத்தகம் முடக்கப்பட்டுள்ளது. இணையம் என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பது உணராத சிங்கள அரசியல் வட்டாரம் நகைப்புக்குரியதே. தீபச்செல்வனின் படைப்புகள் நிறுத்தப்படமாட்டாது அத்துடன் அவருடைய இணையதள முகவரியை தொடர்ந்தும் பின்பற்றுங்கள். மக்களின் ஆதரவு கணிசமான அளவு உள்ள நிலையில் அவரின் படைப்புக்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கேசுதன்

Leave A Reply

Your email address will not be published.