வலிகளை மறந்திடா எம் அனல் தின்ற நிலம் | கேசுதன்

0

எம் வழிகளின் ஈரக்கசிவை யார் உணர்வார். வளம்மிகு எம்நிலம் கயவர் கையில் சிக்கி தவித்ததை அனைத்துலக நாடுகளும் கைகட்டி வேடிக்கை தான் பார்த்தனர் . வாழ்வும் வளமும் அள்ளித்தந்த எம் அன்னையும் அனல் தின்றாள். வளம் பெற்ற வடக்கும் வருவோரை வணங்கி தான் வரவேற்றது. அரும் பெரும் ராஜ வம்சங்களும் வளர்த்த பூமிதனில் சில கயவர்களையும் வளர்த்துவிட்டது.தமிழினம் என்ற ஒரு இனம் இல்லாது ஒழிக்க பல காடையர்களும் கைகோர்த்து நின்றனர். பல நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பல சதிகளும் அரங்கேற்றினர்.

மிருகங்களை வேட்டையாடுவது போல் தமிழ் இனத்தை கொன்று குவித்து தமது கொரூர புத்திகளையும் காட்டியுள்ளனர். பார்ப்பவர் எவராயினும் எதிர்த்து கேட்க துணிவர்.சிறு வயதில் துணிந்தான் மாபெரும் போர்வீர புரட்சியாளன் பிரபாகரன். எதற்கும் துணிவோம் என்ற வாசகத்துக்கிணங்க மாபெரும் படையை திரட்டி களமாடி நின்றான். தற்பெருமை காணா அரும்பெருந்தலைவன் கூட்டினான் கடல் நிலம் வான் படைகளை முப்படைகளுக்குள்ளும் பலப்பிரிவுகளை உருவாக்கினான்.

உலகமே வியக்கும் நிர்வாக பிரிவும் போர் நுட்பங்களையும் தன்னகத்தே வைத்திருந்த மாவீரன். பல படைகளும் திறன்மிக்க போராளிகளை வைத்திருந்தவன் . அனைத்தும் தன்னை பாதுகாக்க என்பதற்கல்ல எம் இனம் என்ற ஒன்றை கட்டியெழுப்பவே . பேரினவாதிகளும் பலமுறை தோற்கடிக்க முற்றப்படடாலும் பலனளிக்காது வஞ்சகர் அண்டைய நாடுகளை அண்டி இனவெறி தாக்குதலையும் அரங்கேற்றியது கொத்து கொத்தாக கொன்றுகுவித்தது பிணம் தின்னி கழுகுகள். குடிநீரும் வற்றி போனது பால் குடித்த குழந்தையும் அனலில் வெந்துபோனது .

வயல் வெளிகளும் காடுகளும் வானரங்களினால் வெந்துபோனது. இயற்கையும் மண்டியிட்டு அனல் தின்றது . குண்டுமழையில் குளிர்காயவைத்தான் சிங்கள அரசியல் காடையன். விம்மியழுதது விசும்பும் நச்சுவாயுவினால். அனல் தெறித்த உடல்களும் புழுவாய் துடித்து இறந்தது. நேரலையில் உலகமும் பார்த்து மகிழ்ந்தது. காட்டுத்தீயாய் பரவியது அணைப்பதத்திற்கு யார்வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இறுதிவரை பற்றிய நெஞ்சோடு எரிந்த உணர்வுடன் தவழ்ந்து சென்றோர்.

போர்க்களத்தில் சரணடைந்த பொதுமக்களை துப்பாக்கிமுனையில் கொன்று குவித்த கொடூரனும் போர்க்களத்தில் சிக்கிய பெண்களை வன்புணர்வு செய்த காடையனும் வாழும் நாம்பூமியில் வலிகளை அடக்கி வழியில்லா வாழ்ந்து வருகின்றோம். உயிர்களை கொன்று உணர்வுகளை தின்று வாழும் பேரினவாதிகளுக்கு மத்தியில் இன்றுவரை உரிமைக்கான குரல்களை ஒலித்தவண்ணம் உள்ளோம்.

வலிகளை மறந்திடா எம் அனல் தின்ற நிலம்

Leave A Reply

Your email address will not be published.