ஜீ. எல். பீரிஸின் உருவப்பொம்மை எரித்து யாழில் போராட்டம்

0

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் அருகில் போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

அந்த வகையில் நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

அதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அமைச்சரின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.

போராட்டத்தின் நிறைவில், போராட்டக்காரர்கள் ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.