பேர­றி­வா­ளனின் விடு­த­லையும் பார்த்­தீ­பனின் எதிர்­பார்ப்பும்

0

தமிழ்­நாட்டின் ஸ்ரீபெ­ரும்­புத்­தூரில் 1991 இல் இடம்­பெற்ற முன்னாள் இந்­திய பிர­தமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச்  சம்­ப­வத்தில் ஆயுள் தண்­டனை அனு­ப­வித்து வந்த ஏழு அர­சியல் கைதி­களில் ஒரு­வ­ரான பேர­றி­வாளன் , 31ஆண்­டுகள் நீடித்த சிறை­வா­சத்தின் பின் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

தன்­னை­வி­டு­தலை செய்­யக்­கோரி 2016 ஆம் ஆண்டு பேர­றி­வாளன் இந்­திய உயர்­நீ­தி­மன்­றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்­தி­ருந்தார். குறித்த மனு­மீ­தான விசா­ர­ணையில் இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் பிர­காரம் பேர­றி­வா­ளனின் விடுதலை விட­யத்தில் தவறு நிகழ்ந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள உச்ச நீதி­மன்றம் கடந்த மே 18 அன்று அர­ச­மைப்புச் சட்­டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் அவரை விடு­தலை செய்து தனது இறுதித் தீர்ப்பை அறி­வித்­தி­ருந்­தது . 

ஏற்­க­னவே வீட்டு விடுப்பில் (பரோலில்) சிறையில் இருந்து வெளியே வந்­தி­ருந்த பேர­றி­வாளன் பின்னர், நிபந்­த­னை­க­ளு­ட­னான பிணையில் விடு­விக்­கப்­பட்டார். இவ்­வா­றான நிலை­யி­லேயே தற்­போது உச்ச நீதி­மன்றம் இவரை குறித்த வழக்­கி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக விடு­தலை செய்­துள்­ளது.

மூன்று தசாப்­த­கால சட்ட போராட்­டத்தின் பின்­ன­ரான பேர­றி­வா­ளனின் இந்த விடு­தலை தாயா­ரான அற்­பு­தம்­மாளின் ஓய்­வொ­ழிச்­ச­லற்ற உழைப்­பி­னாலும் செங்­கொடி என்ற சமூ­கப்­பற்­றா­ளி­னியின் ஒப்­பற்ற உயிர்த்­தி­யா­கத்­தி­னாலும் இன்று சாத்­தி­ய­மா­கி­யுள்­ளமை மறுக்க முடி­யாத உண்மை. இவ்­வி­டு­த­லையை தமிழ் உலகம் மாத்­தி­ர­மன்றி மனித நேயம் கொண்ட பல­த­ரப்­பி­னரும் வர­வேற்று நிம்­ம­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள் என்று சொல்­லலாம். 

இதே 31 ஆண்­டு­க­ளாக தந்தை ராஜீவ் காந்­தியின் இழப்பை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் ராகுல் காந்தி பேர­றி­வா­ளனின் விடு­தலை தொடர்பில் ‘‘ எனது தந்தை எனக்கு மன்­னிக்கும் மனப்­பான்­மையை ஊற்­றியே வளர்த்­துள்ளார்’’ என்று கருத்து கூறி­யுள்ளார் .

ஆனாலும் கூட ஒரு­சில கட்சி அர­சி­ய­லா­ளர்கள் தம் பங்­கிற்கு விடு­த­லையை ஆட்­சே­பித்து ஆங்­காங்கே அர­சியல் கோஷ­மிட்­டுள்­ளார்கள் . இங்கு போற்­று­வோரும் தூற்­று­வோரும் புரிந்­து­கொள்ளக் கட­வது என்­ன­வென்றால் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள பேர­றி­வாளன் கைது செய்­யப்­பட்டு வெறு­மனே ஓரிரு வரு­டங்­களில் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. மனித வாழ்­நாளின் மிக­ப்­பெ­று­ம­தி­ வாய்ந்த  31  ஆண்­டுக்­கால தண்­ட­னையை அணு­வ­ணு­வாக அனு­ப­வித்­ததன் பின்­னரே  விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார் . 

19 வயது இளை­ஞ­னாக சூழ்­நிலை கைதி­யாக்­கப்­பட்ட பேர­றி­வாளன் உட்­பட ஏழு பேரின் விடு­தலை விவ­காரம் நாட்­டி­னு­டைய சட்டம் நீதிக்கு அப்பால் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்டு பந்­தா­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே பேர­றி­வாளன் இளமை முழு­வ­தையும் சிறைக்குள் தொலைத்து தனது 50 ஆவது வயதில் நிறைந்த நோயா­ளி­யாக விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். இவ்­வி­டத்தில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு மிக நீண்ட காலமாக இலங்­கையின் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமி­ழ் அ­ர­சியல் கைதி­க­ளது நிலை­மையும் சற்று திரும்பி பார்ப்­பது அவ­சியம். 

1996 இல் இலங்கை மத்­திய வங்கி மீதான குண்­டுத்­தாக்­கு­தலில் சம்­பந்­த­ப்பட்டவர் என்ற சந்­தே­கத்தின் பேரில் தனது 19 வயதில் கைது செய்­யப்­பட்ட பார்த்­தீபன் கடந்த 26 ஆண்­டு­க­ளாக கொழும்பு மகசீன் சிறைச்­சா­லையில் ஆயுள் தண்­டனையை அனு­ப­வித்து வரு­கின்றார். ‘‘எனக்கு கொள்ளி வைக்­க­வா­வது என் பிள்ளை வீடு வந்து சேரு­வானா…?’’ என்று ஏக்­கப்­பெ­ரு­மூச்­செ­றிந்­த­படி நல்­லூரின் வீதியில் குந்தி கன­வு­ கண்­டு­கொண்­டி­ருக்­கிறார் பார்த்­தீ­பனின் 89 வயது தாயா­ரான யோகேஸ்­வரி அம்மா.

அற்­பு­தம்­மாளைப் போல இந்த அம்­மா­வுக்கு அர­சியல் கட்­சி­களின் அலு­வ­ல­கங்­க­ளுக்கோ ஆட்­சி­யா­ளர்­களின் பணி இடங்­க­ளுக்கோ படி­யேறி விடு­தலை கேட்க வயோ­திபம் இட­ம­ளிக்­க­வில்லை. பார்த்­தீபன் உள்­ளிட்ட நீண்­ட­ கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமி­ழ் அர­சியல் கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும் எனக் கோரி உயர்­தரம் கற்­றுக்­கொண்­டி­ருந்த மாணவன் இரா. செந்­தூரன் நல்­லாட்­சியின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் எழு­தி­விட்டு தொட­ருந்தில் பாய்ந்து தன்­னு­யிரை அர்ப்­ப­ணித்­தி­ருந் தார். ஆன­போ­திலும் செங்­கொ­டியின் தியா­கத்தை இந்­திய அரசு திரும்பி பார்த்த அள­வுக்கு செந்­தூ­ரனின் உயிர் அர்ப்­ப­ணிப்பை இலங்கை அரசு கண்­டு­கொள்­ள­வில்லை. 

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க மீதான குண்­டுத்­தாக்­குதல் தொடர் பில் கைது செய்­யப்­பட்ட இந்து மத குரு உட்­பட மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் கடந்த 22 ஆண்­டு­க­ளாக சிறையில் வாடு­கின்­றனர். இவ்­வா­றி­ருக்கு மே 18 முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நாளன்று சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க அவர்கள் உயி­ரி­ழந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்து தனது வீட்டில் சுடர் ஏற்றி அஞ்­சலி செலுத்­தி­யுள்ளார் . அது­மட்­டு­மன்றி வெறுப்­புக்கு பதி­லாக அன்பை காட்­டுவோம் பழி­வாங்­கு­வ­தற்கு பதி­லாக மன்­னிப்போம் என்று தெரி­வித்­துள்ளார். இது ஒரு வகையில் ராகுல் காந்­தியின் மன மாற்­றத்தை ஒத்து நிற்­கின்­றது.

மொத்­தத்தில் காலி­மு­கத்­திடல் போராட்ட க்களத்தில் நினை­வேந்தல் அனுஷ்­டித்த விடயம் முதல் கொண்டு இந்த ஆண்டின் மே–18 பல மனமாற்றங்களுக்கு வித்திட்டிருப்பதாகவே எண்ணத் தோன்று கின்றது. 

எனவே அரசாங்கம் இப்போதாவது சந்தர்ப்ப சூழ்நிலை கைதிகளாக தசாப் 

தங்கள் கடந்த சிறைவாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் 

விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும். இதன்மூலம் இன, சமூக, நல்லெண்ண,  நம்பிக்கையை ஏற்படுத்தி பொருளாதார பின்னடைவு கண்டுள்ள இந்நாட்டை ஒற்றுமையுடன் கைகோர்த்து மீளக்கட்டி யெழுப்ப முடியும் என்று  நம்பலாம்.

விவேகானந்தனூர் – சதீஸ். இப் பத்தியின் எழுத்தாளர், அரசியல் கைதியாக விடுதலையை நோக்கி காத்திருப்பவர்.

Leave A Reply

Your email address will not be published.