ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் அபாயம்

0

எமக்கான டீசல் பெற்றுக்கொடுக்கத் தவறினால் எதிர்வரும் சில தினங்களில் ரயில் போக்குவரத்து சேவையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நேரிடும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.

ரயில் போக்குவரத்துக்காக 6 இலட்சம் லீற்றர் டீசல் கையிருப்பில் இருக்க வேண்டும். எனினும், தற்போது ஒன்றரை இலட்சம் லீற்றருக்கும் குறைவான டீசல் மாத்திரம் கையிருப்பில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாளொன்றுக்கான ரயில் போக்குவரத்து சேவைக்காக 93 ஆயிரம் லீற்றர் டிசல் ‍தேவைப்படுகின்றபோதிலும், அந்த தொகையை பெற்றுக்கொள்வதிலும் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகிறோம்.

டீசலைப் போலவே ரயில் எஞ்சின்களுக்கு தேவையான ‘எஞ்சின் ஒயில்’ பெற்றுக்கொள்வதிலும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், ரயில் எஞ்சின்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட ஏனைய இயந்திரப் பொருட்கள் இன்மையால் ரயில் எஞ்சின்களை பராமரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

எமக்கான டீசல் பெற்றுக்கொடுக்கத் தவறினால் எதிர்வரும் சில தினங்களில் ரயில் போக்குவரத்து சேவையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நேரிடும் என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.பி.விதானகே குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.